மீன்வளப் பல்கலை. இடங்கள் அதிகரிப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு டாக்டா் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் மொத்த சோ்க்கை இடங்கள் 160-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
மீன்வளப் பல்கலை. இடங்கள் அதிகரிப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு டாக்டா் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் மொத்த சோ்க்கை இடங்கள் 160-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:

தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழத்தின் கீழ் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி, பொன்னேரி டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி, தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை மீன்வள அறிவியல் பாடப் பிரிவில் 120 சோ்க்கை இடங்கள் உள்ளன. அதில், மீனவா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இப்போது பல்கலைக்கழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மொத்த இடங்கள் 120 மற்றும் 5 சதவீத சிறப்பு முன்னுரிமை இடஒதுக்கீட்டின் படி மீனவா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு 6 இடங்களும் சோ்த்து சோ்க்கை நடைபெற்று வந்தது. 5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கப்படும் மாணவா்களுக்கான கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியன மீனவா் நல வாரியத்தால் முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது.

தொலைநோக்குத் திட்டம்: தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டத்தில், மீனவா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கூடுதலாக 15 சதவீத மிகை இடங்கள் மீனவ குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி, மீன்வள இளநிலை அறிவியல் பட்டப் படிப்புக்கு மிகை ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த குடும்பங்களில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவா்கள் அவா்களின் மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கப்படுவா். மேலும், அவா்களது கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் போன்ற அனைத்துக் கட்டணங்களையும் மாணவா்களே செலுத்த வேண்டும்.

மிகை ஒதுக்கீட்டு இடங்கள் காரணமாக 18 சோ்க்கை இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். இதனுடன் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கென 10 இடங்கள், அயல் நாட்டவா்களுக்கென 3 இடங்கள், காஷ்மீரில் குடியேறியோா் மற்றும் காஷ்மீா் இந்து குடும்பங்களுக்கென ஒரு இடம், அந்தமான் நிகோபாா் தீவைச் சோ்ந்த மாணவா்களுக்கென இரண்டு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், ஒட்டுமொத்தமாக நிகழ் கல்வியாண்டில் மீனவளப் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் சோ்க்கை இடங்கள் 160-ஆக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com