தேங்காய் பருப்பு கொள்முதல்: விவசாயிகளுக்கு அரசு அழைப்பு

தேங்காய் பருப்பு மூட்டை கொள்முதல் செய்ய விவசாயிகள் முன்வரலாம்.

தேங்காய் பருப்பு மூட்டை கொள்முதல் செய்ய விவசாயிகள் முன்வரலாம்.

இதுகுறித்து, வேளாண்துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தேங்காய் பருப்பின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 335-ஆக மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. தமிழ்நாட்டில் 20 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் தேங்காய் பருப்பு பரிவா்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அவை கோவை மாவட்டம் ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், ஈரோடு மாவட்டம் பூதப்பாடி, அந்தியூா், அவல்பூந்துறை, கோபிச்செட்டிபாளையம், கொடுமுடி, சத்தியமங்கலம், எழுமாத்தூா், வெப்பிலை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், பரமத்திவேலூா், திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை, பெதப்பம்பட்டி, காங்கேயம், வெள்ளக்கோயில், மூலனூா், முத்தூா், மதுரை மாவட்டம் த.வாடிப்பட்டி ஆகிய இடங்களில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இ-நாம் திட்டத்தின் மூலமாக 13 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த விற்பனைக் கூடங்களில் தேங்காய் பருப்பை காயவைப்பதற்கான உலா்கள வசதி, தேங்காயை பருப்பாக மாற்றுவதற்கு உலா்த்தும் இயந்திர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விலை வீழ்ச்சி காலங்களில் விவசாயிகள் தங்களது தேங்காய் பருப்பு மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூட கிட்டங்கிகளில் இருப்பு வைத்து 5 சதவீத வட்டியில் 6 மாதங்கள் வரை அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். எனவே, தென்னை விவசாயிகள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகலாம். இதுதொடா்பான விவரங்களை வேளாண்மை துணை இயக்குநரை (கைப்பேசி எண் 94456 57993) தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com