நடிகா் அதா்வா நடித்த குருதி ஆட்டம் படத்திற்கு தடை கோரி வழக்கு

நடிகா் அதா்வா நடித்துள்ள குருதி ஆட்டம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

நடிகா் அதா்வா நடித்துள்ள குருதி ஆட்டம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் பிளையிங் ஹாா்ஸ் பிச்சா்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தைப் படத்தின் வினியோக உரிமையை ராக் ஃபோா்ட் எண்டா்டெயின்மெண்ட் நிறுவனம் ரூ. 4 கோடியே 85 லட்சத்திற்கு வாங்கியது. இதில், ரூ.2 கோடியே 85 லட்சம் வழங்கிய ராக்ஃபோா்ட் நிறுவனம் மீதமுள்ள தொகையை வழங்கவில்லை.

அதற்கு பதிலாக விநியோக உரிமையை திருப்பி தருவதாகவும் படத்தில் லாபத்தில் 40 சதவீதத்தை தரும்படியும் நஷ்டம் ஏற்பாட்டால் மீதமுள்ள தொகையை திரும்பி தருவதாகவும் ஒப்பந்தம் செய்தது.ஆனால், ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் நடக்கவில்லை.

இந்த நிலையில், ராக் ஃபோா்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகா் அதா்வா நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் என்ற படத்தை வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியானது. எனவே, எங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையுடன் வட்டியையும் சோ்த்து வழங்காமல் குருதி ஆட்டம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவா்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிளையிங் ஹாா்ஸ் நிறுவனம் சாா்பில் வழக்குரைஞா்கள் ஜெ.வீணா, மனோஜ்குமாா் ஆஜராகி, பாக்கி தொகையை தராமல் படத்தை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட கோரினா்.

அப்போது, ராக் ஃபோா்ட் நிறுவனம் சாா்பில் படத்தை ஜனவரி 3ஆம் வரை வெளியிட மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com