உயிரிழந்த 30 காவலர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 30 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி. 
உயிரிழந்த 30 காவலர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
உயிரிழந்த 30 காவலர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 30 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி. 

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கோயம்புத்தூர் மாவட்டம், கோவை மாநகரம், சிங்காநல்லூர் காவல் நிலையம், சட்டம் (ம) ஒழுங்குப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தி. முருகன்; பந்தயசாலை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பெ.குமரேசன்; விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த பா. மயில்; வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எம். எஸ். கார்த்திகேயன்; அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த
சோ. கனகராஜ்; இருக்கன்குடி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ப. ரத்தினவேல்முருகன்; சென்னை பெருநகரக் காவல், புதுப்பேட்டை, ஆயுதப்படை-I, ஆ நிறுமம், 12 ஆம் அணியில் பணிபுரிந்து வந்த இரண்டாம் நிலை வாத்தியக்குழு காவலர் வே. சங்கர்; சூ-4 மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் சட்டம் (ம) ஒழுங்குப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நா. கோபால்; தமிழ்நாடு சிறப்புக் காவல் 3 ஆம் அணி, வீராபுரத்தில் அவில்தாராகப் பணிபுரிந்து வந்த எஸ். செந்தில்குமார்; சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, தலைமையகம், சென்னையில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் த. மணிகண்டன்; தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பி. பன்னீர்செல்வம்;  ஈரோடு மாவட்டம், ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வீ. மூர்த்தி;

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ப்பி. வடிவேல்; தச்சம்பட்டு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எஸ். வெங்கடேசன்; போளூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எஸ். அண்ணாமலை; மாவட்ட குற்றப்பிரிவில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த அனிதா; திருவண்ணாமலை போக்குவரத்து காவல் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எம். சக்கரவர்த்தி; சேலம் மாவட்டம், சேலம் மாநகர தெற்கு போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கோ. ரவிச்சந்திரன்; சேலம் மாநகரம், அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரா. மாரிமுத்து; திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அ. செயதில்குமார்; லால்குடி நெடுஞ்சாலை ரோந்து பிரிவு VIII-ல், உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த முருகேசன்; விழுப்புரம் மாவட்டம், வளத்தி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மௌ. குமாரபாலன்; ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மு. அசோகன்; ஆயுதப்படைப் பிரிவில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வி. விஜய் சச்சின்; கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பே. ஜஸ்டின் ராபர்ட்; ஈரோடு மாவட்டம், சிறுவலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கு. ஜேம்ஸ் ராபர்ட்; சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திருமதி விஜயா; சேலம் மாநகரம், ஆயுதப்படை, வாகனப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சி. கிருஷ்ணன்; தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ப. கோவியதராஜ்; கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மா. கோபி; ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர்.

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 30 காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்ட பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 30 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com