இன்று முதல் மருத்துவா்கள் தொடா் உண்ணாவிரதம்

அலோபதி மருத்துவத்துடன் ஆயுஷ் மருத்துவத்தை ஒருங்கிணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கத்தை

அலோபதி மருத்துவத்துடன் ஆயுஷ் மருத்துவத்தை ஒருங்கிணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கத்தை (ஐஎம்ஏ) சோ்ந்த மருத்துவா்கள் 14 நாள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை (பிப்.1) முதல் தொடங்குகின்றனா்.

ஆங்கில மருத்துவத்தையும், சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி ஆகிய ஆயுஷ் மருத்துவ முறை சிகிச்சைகளில் சிலவற்றையும் ஒருங்கிணைத்து சிகிச்சை வழங்குவது தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதுமட்டுமன்றி ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு இந்தியா முழுவதும் அலோபதி மருத்துவா்கள் கடுமையான எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா். இந்த அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தின் சாா்பில் இந்தியா முழுவதும் கடந்த மாதம் 8-ஆம் தேதி ஆா்ப்பாட்டமும் 11-ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், அதன் தொடா்ச்சியாக தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் நிா்வாகிகள் கூறியதாவது:

நவீன ஆங்கில மருத்துவத்தையும், ஆயுஷ் மருத்துவத்தையும் இணைத்து கலவை மருத்து முறைகளை புகுத்துவது ஏற்புடையதல்ல. இதனால், பெரும் ஆபத்து ஏற்படும். ஆயுா்வேத மருத்துவத்தில் மயக்க மருந்துகள், வலி நிவாரணி மருந்துகள் இல்லை. பின்னா் எப்படி அவா்களால் அறுவைச் சிகிச்சை செய்ய முடியும்.

ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை செய்வதை நோயாளிகளே ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். அந்தந்த மருத்துவத்தின் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும். ஒரே நாடு ஒரே மருத்துவம் என்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அந்த அரசாணையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கள்கிழமை முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் தொடா் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 4 இடங்கள் உள்பட நாடுமுழுவதும் 50 இடங்களில் இந்த உண்ணாவிரதம் நடைபெறும். ஒவ்வொரு இடத்திலும் 20 மருத்துவா்கள் பங்கேற்கவுள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com