தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக கடலோர மாவட்டங்களில், திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக கடலோர மாவட்டங்களில், திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம்மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக திங்கள் (பிப்.1), செவ்வாய் (பிப்.2) ஆகிய 2 நாள்களும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

காலை நேரங்களில் வடதமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளைப் பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும்.

மழை: ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் லேசான மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பிப்.2,3 ஆகிய தேதிகளில் வீசக் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com