தொழிலாளர் சட்டத் தொகுப்பு நகலை எரித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை எரித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். 
தொழிலாளர் சட்டத் தொகுப்பு நகலை எரித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்

திருச்சியில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை எரித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். 

2021-22 பட்ஜெட் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், தொழிலாளர்களுக்கு விரோதமான பல்வேறு அம்சங்கள் அதில் இருப்பதாக கூறி அந்த பட்ஜெடை கண்டித்தும்,மத்திய அரசு மின்சார திருத்தச் சட்டம் 2020 ஐ திரும்ப பெற வேண்டும்,

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி தொ.மு.ச, ஐ.என்.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் தலைமை தபால் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர். அதை காவல்துறையினர் தடுக்க முற்பட்டபோது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com