தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

தம்மம்பட்டியில் நாளை (பிப்.6) ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையடுத்து இன்று தம்மம்பட்டியில்  சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.
ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையடுத்து தம்ம்ம்பட்டிக்கு  சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையடுத்து தம்ம்ம்பட்டிக்கு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் நாளை (பிப்.6) ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையடுத்து இன்று தம்மம்பட்டியில்  சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

தம்மம்பட்டி  ஐல்லிக்கட்டு விழா நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியர் சி.அ.இராமன், அருகிலுள்ள திறந்த வெளிக் கிணற்றுக்கு தடுப்புக்கட்டை அமைப்பது, உள்ளூர் , வெளியூர் மாடுகளை 
தனித்தனியே குழப்பம் இன்றி அனுப்புவது, மாடுகள் வெளியேறும் பகுதியில், அறிவிப்பு செய்ய மைக்குடன் காவலர் நிற்க வைத்தல் , பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து, வருவாய், காவல்துறை  அதிகாரிகளிடம் ஆலோசனைகள் வழங்கினார்.

ஆய்வின்போது  ஆத்தூர் கோட்டாட்சியர் துரை, கெங்கவல்லி வட்டாட்சியர் வரதராஜன், ஆத்தூர் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன், தம்மம்பட்டி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஸ்ரீகுமரன், கெங்கவல்லி வட்டார மருத்துவர் வேலுமணி, சுகாதார ஆய்வாளர் ஜமால் முகமது, தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி,  தம்மம்பட்டி  ஆய்வாளர் பாஸ்கரபாபு , கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) செந்தில்மற்றும் கால்நடை,  மின்சாரத் துறை அதிகாரிகள்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com