சங்ககிரி அருகே லாரி கவிழ்ந்து 20 ஆடுகள் பலி 

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெங்களூரிலிருந்து கோவை நோக்கி சென்ற லாரி சனிக்கிழமை கவிழ்ந்ததில் 20 ஆடுகள் உயிரிழந்தன. 
பெங்களூரிலிருந்து  கோவை நோக்கி சென்ற லாரி சங்ககிரியை அடுத்த குப்பனூர் தேசியநெடுஞ்சாலையில் சனிக்கிழமை கவிழ்ந்து கிடக்கும் லாரி.
பெங்களூரிலிருந்து கோவை நோக்கி சென்ற லாரி சங்ககிரியை அடுத்த குப்பனூர் தேசியநெடுஞ்சாலையில் சனிக்கிழமை கவிழ்ந்து கிடக்கும் லாரி.

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெங்களூரிலிருந்து கோவை நோக்கி சென்ற லாரி சனிக்கிழமை கவிழ்ந்ததில் 20 ஆடுகள் உயிரிழந்தன. 

கோவை மாவட்டம், ஓண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மனோஜ்குமார். அவர்  பெங்களூரிலிருந்து கோவைக்கு 100  ஆடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

லாரி சங்ககிரி அருகே உள்ளகுப்பனூர் தேசியநெடுஞ்சாலை பகுதியில் செல்லும் போது எதிர்பாரதவிதமாக  சாலையோரம் இருந்த மண் திட்டின் மீது லாரி ஏறியதில் கவிழ்ந்தது.

லாரி கவிழந்ததில்  20 ஆடுகள் நிகழ்விடத்திலேயே இறந்து விட்டன. லாரி ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்து சென்ற கோவை ஓண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த கிண்கிணி (45) பலத்த காயமடைந்துள்ளார்.

காயமைடந்த அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர்தப்பினார்.  இது குறித்து சங்ககிரி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com