அதிமுக பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இல்லை: மு.க.ஸ்டாலின்

முதல்வர் பழனிசாமியின் பெயரை அதிமுகவினர் கூட முன்மொழியமாட்டார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் பழனிசாமியின் பெயரை அதிமுகவினர் கூட முன்மொழியமாட்டார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரசார நிகழ்ச்சி  சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின்  பொதுமக்களை  சந்தித்து உரையாடினார். பின்னர் கல்வி, கலை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 12 பேருக்கு விருதுகள் வழங்கி வாழ்த்தினார்.

பின்னர் அவர் பொது மக்கள் மத்தியில் பேசும்போது, ஒருவருக்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டது என்றால் அது இந்த ஸ்டாலினுக்காகத்தான். 
கடந்த 2001-ஆம் ஆண்டு நான் சென்னை மேயராகவும், சட்டப் பேரவை உறுப்பினராக வும் இருந்தேன், அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தனிப்பட்ட விரோதத்துக்காக ஒருவர் ஒரு பதவியில்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

உடனே நான் மேயர் பதவியை ராஜினாமா செய்தேன். மக்களுக்கு சேவை ஆற்றத்தான் பதவியே தவிர எனது தனிப்பட்ட உயர்வுக்காக அல்ல. 

ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி திமுக ஆட்சி அமைக்கும் என்றார்கள். அதிமுகவில் இருந்தும் சிலர் தூது விட்டார்கள். அப்படி ஆட்சி அமைத்தால் அது முழுமையான திமுக அரசாக இருக்காது.

கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அது விரைவில் அமைய உள்ளது.
234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைய உள்ளது.

அரை அதிமுக ஆட்சி, அரை பாஜக ஆட்சி:

இன்று நடப்பது அரை அதிமுக ஆட்சி, அரை பாஜக ஆட்சி. எல்லாவற்றையும் அரை குறையாக செய்து கொண்டிருக்கிறார்கள்.  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் போடுவார்கள், ஆனால் நீட் தேர்வு இருக்கும். 

7 பேர் விடுதலைக்கு ஆதரவாக தீர்மானம் போடுவார்கள். ஆனால் அவர்கள் சிறையில் இருப்பார்கள். இரு மொழி கொள்கை என்று தீர்மானம் போடுவார்கள் ஆனால் இந்தி திணிப்பு இருக்கும்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு வார்கள். ஆனால் ஒரு செங்கல் கூட வைக்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தன்னை முதல்வர் என்பார், ஆனால் அமைச்சர்கள் யாரும் அவரை மதிக்க மாட்டார்கள்.

பழனிசாமி தனது கட்டுப்பாட்டுக்குள் அதிமுக இருப்பதாக காட்டி க் கொள்வார். ஆனால் அவரது பெயரை பன்னீர் செல்வம் கூட முன் மொழிய மாட்டார்.

அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து நாட்டை கெடுத்து வருகிறது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட திமுகவுக்கு முழுமையான வெற்றியை தாருங்கள் என்றார். முன்னதாக குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com