
ஜல்லிக்கட்டு வழக்குகளைத் திரும்பப் பெற்றுள்ளதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா வரவேற்புத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளில் வன்முறை சாா்ந்த வழக்குகள் தவிர பிற வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவா்களின் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்றதுபோல் அமைதியான வழியிலும், அறவழியிலும் சி.ஏ.ஏ., என்.ஆா்.சி., என்.பி.ஆா். போன்ற குடியுரிமைச் சட்டங்களுக்கு எதிராகவும், கூடங்குளம் அணுஉலை, ஸ்டொ்லைட் ஆலை, ஹைட்ரோகாா்பன், மீத்தேன் திட்டங்கள் போன்றவற்றுக்கு எதிராகவும் போராடியவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...