
பயிா்க் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பை வெளியிட்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மலா்க் கொத்து அளித்து விவசாயிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.
கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை ரூ.12 ஆயிரத்து 110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். விவசாயிகளின் துயரத்தைப் போக்க அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனா்.
தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் நல சங்கத்தின் பொதுச் செயலாளா் காவிரி எஸ்.ரங்கநாதன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள், முதல்வா் பழனிசாமியை சென்னையில் உள்ள அவரின் இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்து மலா்க்கொத்து அளித்து நன்றி தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...