காலிங்கராயன் வாய்க்காலில் கலக்கும் சாயப்பட்டறை கழிவு நீர் குழாய் உடைப்பு

ஈரோடு மாவட்டம், பவானி காலிங்கராயன் பாளையத்திலிருந்து கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார் பாறை வரை காலிங்கராயன் வாய்க்கால்
ஜேசிபி இயந்திர உதவியுடன் குழாய்களை உடைத்து அப்புறப்படுத்தி ஆய்வில் செய்து வரும் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணி.
ஜேசிபி இயந்திர உதவியுடன் குழாய்களை உடைத்து அப்புறப்படுத்தி ஆய்வில் செய்து வரும் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணி.


ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானி காலிங்கராயன் பாளையத்திலிருந்து கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார் பாறை வரை காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காலிங்கராயன் வாய்க்காலில் ஈரோடு நகர் பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்களை வாய்க்காலில் திறந்து விடுவதாக காலிங்கராயன் பாசன விவசாயிகள் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணியத்திடம் புகார் அளித்திருந்தனர். 

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு செல்லும் முன்பு சோலார் அருகே உள்ள பாலுச்சாமி நகர், வெண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணி நேரில் பார்வையிட்டு சாயக்கழிவு நீர் செல்வதைத் ஆய்வு செய்தார். 

காலிங்கராயன் வாய்க்காலில் கலக்கும் சாயப்பட்டறை கழிவு நீர் குழாய் உடைப்பு

அதனைத் தொடர்ந்து சாயக்கழிவு நீர் செல்வதாக புகார் வந்தால் நேரடியாக சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை எந்தெந்த ஆலைகளிலிருந்து கலப்பது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், மீண்டும் சாயக்கழிவு நீர் வாய்க்காலில் கலந்து விடுவதாக வந்த புகாரை அடுத்து சிவசுப்பிரமணி நள்ளிரவு முதல் ஈரோடு வெண்டிபாளையம் அருகே உள்ள குப்பை கிடங்கு பகுதியில் செயல்பட்டுவரும் சாயப்பட்டறை ஆலைகள் முன்பு ஆய்வு செய்தார். அப்போது சாயப்பட்டறையில் இருந்து வெளியேறி வாய்க்காலில் கலக்கும் பைப்புகளை உடைத்தார். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

இந்த ஆய்வில் இரண்டு ஜேசிபி இந்த இயந்திர உதவியுடன் குழாய்களை உடைத்து அப்புறப்படுத்தினர். மேலும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com