முகாமிற்காக மேட்டுப்பாளையம் வரும் யானைகள்

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றக்கரையில் உள்ள தேக்கம்பட்டியில் 48 நாள்கள் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானையும் வந்து சேர்ந்தது.
மேட்டுப்பாளையத்தில் யானைகள் முகாமிற்கு லாரியில் வந்திறங்கிய யானைகள்
மேட்டுப்பாளையத்தில் யானைகள் முகாமிற்கு லாரியில் வந்திறங்கிய யானைகள்


மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றக்கரையில் உள்ள தேக்கம்பட்டியில் 48 நாள்கள் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானையும் வந்து சேர்ந்தது.

லாரியில் வந்திறங்கிய யானைகள்

இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. புத்துணர்வு முகாம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் தொடர்ந்து முகாம் நடைபெற்று வருகிறது. 

2006- 2010ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் யானைகள் முகாம் ரத்து செய்யப்பட்டிருந்தது. 2011 இல் மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் அதே ஆண்டு மீண்டும் யானைகள் முகாம் தொடங்கியது. மேலும் 2012 ஆம் ஆண்டு முதல் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்தாண்டு13 ஆவது யானைகள் முகாம் நாளை திங்கள்கிழமை (பிப்.8) முதல் தொடர்ந்து 48 நாள்கள் நடத்தப்படுகிறது. 

இதையொட்டி தமிழகத்தில் கோவில்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வனபத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் இறக்கி முகாம் வரை நடக்க வைத்து செல்லப்பட்டது.  

முன்னதாக முகாமிற்கு மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவில் யானை அபயாம்பிகையும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானையும் முகாம் வளாகத்திற்கு வந்து சேர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com