கிரண் பேடியை மாற்றக் கோரிக்கை: குடியரசுத் தலைவரிடம் முதல்வர் மனு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை மாற்றக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முதல்வர் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
கிரண் பேடியை மாற்றக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முதல்வர் முதல்வர் நாராயணசாமி மனு
கிரண் பேடியை மாற்றக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முதல்வர் முதல்வர் நாராயணசாமி மனு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை மாற்றக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முதல்வர் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகளால் மாநில அரசு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று நாயாரணசாமி குற்றம் சாட்டி வருகிறார்.

இதனிடயே கிரண்பேடியை மாற்றக்கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.

நேற்று மாலை புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட முதல்வர் நாராயணசாமி இன்று (பிப்.10) நண்பகல் குடியரசுத் தலைவரை சந்தித்து கிரண்பேடியை மாற்றக்கோரி மனு அளித்தார்.

மேலும், ஆளும் அரசுக்கு கிரண்பேடி அளிக்கும் சிக்கல்கள் குறித்தும் ராம்நாத் கோவிந்திடம் முதல்வர் விளக்கினார். பின்னர் புதுச்சேரி மக்களிடம் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்கப் பிரதிகளையும் குடியரசுத் தலைவரிடம் நாராயணசாமி ஒப்படைத்தார்.

ஆளுநர் கிரண்பேடி மீது பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் ஏற்கெனவே புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com