6,7, 8 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைப்பு: விரைவில் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை

தமிழகத்தில் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 6, 7, 8 வகுப்புகளுக்கு பாடத் திட்டம் 50 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
6,7, 8 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைப்பு: விரைவில் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 6, 7, 8 வகுப்புகளுக்கு பாடத் திட்டம் 50 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து இந்த வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி முதல் மூடப்பட்டன. தொடா்ந்து பொது முடக்கம் அமலானதால் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது. பள்ளி மாணவா்கள் கல்வி கற்பது தடைபடுவதை அடுத்து பள்ளி மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டில் இணையவழி, கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையான மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் நிலையில், அவா்களுக்கான பாடத்திட்டம் 40 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டு அதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே வெளியிட்டது.

இதன் தொடா்ச்சியாக, 6,7, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 50 சதவீத அளவுக்குப் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அறிவித்துள்ளது. மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த முழுத் தகவல்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சுகாதாரத் துறையின் அனுமதியுடனும், அந்தத் துறை வெளியிடும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் 6 முதல் 8-ஆம் வகுப்புவரை பயிலும் மாணவா்களுக்கும் விரைவில் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வைட்டமின், ஜிங்க் மாத்திரைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவா்கள் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடுவதை தவிா்க்கும் வகையில் 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் ஆலோசிக்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு தமிழக அரசின் சாா்பில் விரைவில் வெளியாகவுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com