அதிமுக - சசிகலா பிரச்னைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை: இல. கணேசன்

அதிமுகவுக்கும், சசிகலா தரப்புக்கும் உள்ள பிரச்னையில் பாஜகவுக்கு சம்பந்தம் இல்லை என்று கட்சியின் தேசியச் செயலாளர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியச் செயலாளர் இல. கணேசன்
தூத்துக்குடியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியச் செயலாளர் இல. கணேசன்

அதிமுகவுக்கும், சசிகலா தரப்புக்கும் உள்ள பிரச்னையில் பாஜகவுக்கு சம்பந்தம் இல்லை என்று கட்சியின் தேசியச் செயலாளர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு மிகச்சிறப்பாக உள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் அதிமுக கூட்டணி ஆட்சி அமையும். கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்தும், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகிறார். அவரது நடவடிக்கை மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவுக்கும், சசிகலா தரப்புக்கும் உள்ள பிரச்னையில் பாரதிய ஜனதா கட்சிக்கு சம்பந்தம் இல்லை. இருவரும் விரும்பினால் சேர்ந்துகொள்ளலாம். பொதுவாகவே எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எது அபிப்ராயம். இந்த விவகாரத்தை அதிமுகவினர் சரி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவும், பாஜகவும் இணைந்து மக்களை சந்தித்து பிரசாரம் செய்யும்போது வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும்.

கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட திமுக தற்போது வேல் வாங்குவது, ஆதிபராசக்தி கோயிலுக்குச் செல்வது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தாது. திமுகவை மக்கள் நம்ப மாட்டார்கள். நிறைய தவறுகள் செய்துவிட்டு ஒரு நாளில் பாவ மன்னிப்பு கொடுக்கும் மதம் அல்ல இந்து மதம் என்றார் அவர்.

தொடர்ந்து, தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிர்வாகிகள், சமுதாயத் தலைவர்கள், வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்து பாஜக தேசிய செயலர் இல. கணேசன் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com