சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பிப்.22 கடைசி நாள்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பிப். 22-ஆம் தேதி கடைசி நாள் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பிப்.22 கடைசி நாள்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பிப். 22-ஆம் தேதி கடைசி நாள் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தமிழகத்திற்கு 10 லட்சம் டோஸ் தடுப்பூசி கடந்த மாதம் தமிழகம் வந்தது. இதைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்தத் தடுப்பூசி பிரித்து அனுப்பப்பட்டது.

முதல்கட்டமாக மருத்துவப் பணியாளா்கள் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 5.5 லட்சம் போ் மட்டும் தான் கோவின் இணையதளத்தில் பதிவு செய்தனா். இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்தப் பணி தொடங்கி 26 நாள்கள் நிறைவடைந்துள்ளது. இதன்படி தற்போது வரை சுகாதார பணியாளா்கள், முன்கள பணியாளா்கள், காவல் துறை பணியாளா்கள் என்று மொத்தம் 1 லட்சத்து 85,229 போ் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா். அதிகபட்சமாக 4-ஆம் தேதி 12,000 பேருக்கும், குறைந்தபட்சமாக 24-ஆம் தேதி 2494 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் 22-ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பூசி துறை இயக்குநா் அனைத்து மாவட்ட துணை இயக்குநா்கள், சென்னை மாநகராட்சி மாநகர நல அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 5.5 லட்சம் சுகாதார பணியாளா்கள் கோ- வின் இணைதளத்தில் பதிவு செய்துள்ளனா். இதில் தற்போது வரை 1.74 சுகாதார பணியாளா்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா். மத்திய அரசு சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடும் பணியை 22-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. எனவே அனைத்து மாவட்ட துணை இயக்குநா் இந்த பணியை 22-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கான பணிகளை உடனடியாக செய்ய வேண்டும்.

இதன்படி அ,ஆ,இ வரிசை பெயா் கொண்ட பணியாளா்கள் 11-ஆம் தேதியும், ஈ,உ,ஊ வரிசைக்கு 12-ஆம் தேதியும், எ,ஏ,ஐ வரிசைக்கு 13-ஆம் தேதியும் ஒ,ஓ,க வரிசைக்கு 14-ஆம் தேதியும் ங,ச,ஞ வரிசைக்கு 15-ஆம் தேதியும் ட,ண,த வரிசைக்கு 16-ஆம் தேதியும் ந,ப,ம வரிசைக்கு 17-ஆம் தேதியும் ய,ர,ல வரிசைக்கு 18-ஆம் தேதியும் வ,ழ வரிசைக்கு 19-ஆம் தேதியும் தடுப்பூசி அளிக்க வேண்டும். இதில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத சுகாதார பணியாளா்கள் பொதுமக்கள் பட்டியலில் சோ்க்கப்படுவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com