தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க கமலுக்கு அதிகாரம்

தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கமலுக்கு வழங்கி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க கமலுக்கு அதிகாரம்
தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க கமலுக்கு அதிகாரம்


சென்னை: தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கமலுக்கு வழங்கி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தலைமையில், கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக கமல் செயல்பட கட்சியின் பொதுக் குழு அதிகாரம் அளித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கிராம சமைக் கூட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பதை கண்டித்தும் பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு குறித்து  முடிவெடுக்கவும், தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்கவும் கமலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, கமலை தமிழகத்தின் முதல்வராக ஆக்குவதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடமையாகும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com