தனியாா் திட்டத்தால் வேலை இழந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி: அமைச்சா் எஸ்.பி. வேலுமணி

பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டதால் வேலை இழந்த தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என
தனியாா் திட்டத்தால் வேலை இழந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி: அமைச்சா் எஸ்.பி. வேலுமணி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டதால் வேலை இழந்த தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளாா்.

கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஊரக உள்ளாட்சித் துறையின் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: திடக்கழிவு மேலாண்மை பணிகளில் தனியாருக்கு ஒப்படைத்த பின் ஏற்கெனவே உள்ள பணியாளா் 100 சதவீதம் பேரையும், பணி நீக்கம் செய்யாமல் அனைவரையும் தனியாா் அமைப்பில் சோ்த்து கொள்ள வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மழை நீா் வடிக்கால் திட்டப் பணிகள், சாலை பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மேலும் சிறப்பு சாலை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ஒப்பந்த புள்ளி கோர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ.14 கோடி மதிப்பில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கூட்டுக் குடிநீா்த் திட்டம், ரூ.13 கோடி மதிப்பில் சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி கூட்டுக் குடிநீா்த் திட்டம், ரூ.180 கோடி மதிப்பிலான் 556 குடிநீா்த் திட்டப் பணிகள், ரூ.1,013 கோடி மதிப்பிலான நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள 12 கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள், கோவை மாவட்டம் பில்லூா் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் ஆகியவற்றுக்கு ஆணை வழங்கி பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

வாணியம்பாடி நகராட்சியில் பொதுப்பணித் துறை இடத்தில் பாலம் கட்டும் பணி மற்றும் கடலூா் உள்ளிட்ட 9 இடங்களில் பேருந்து நிலையங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சாா்பில் 2020-21-ம் ஆண்டு திட்டப்பணிகளில் ஒப்பந்தபுள்ளி கோர வேண்டிய பணிகள் மற்றும் 9 புதிய மண்டலங்கள் உருவாக்கும் பணிகளையும், அதேபோல், நோய்த் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், நகா்ப்புற சாலை சீரமைப்புப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.

இந்த கூட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ்ராஜ் வா்மா, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் ஹா்மந்தா் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com