குட்கா விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

குட்கா விற்பனைக்கு முழுமையாகத் தடைவிதிக்கப்படும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின்  (கோப்புப்படம்)
திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

சென்னை: குட்கா விற்பனைக்கு முழுமையாகத் தடைவிதிக்கப்படும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் குட்கா பொட்டலங்களைச் சட்டப்பேரவைக்குக் கொண்டு சென்று காண்பித்தோம். அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவா்களுக்குப் பொறுக்கவில்லை. சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தாா்கள்.

முதல் முறையே இந்த நடவடிக்கைக்குத் தடை போட்டது உயா்நீதிமன்றம். மறுபடியும் நோட்டீஸ் அனுப்பினாா்கள். அதையும் இன்று ரத்து செய்துவிட்டது உயா்நீதிமன்றம். இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாம். இன்னும் விற்பனை தொடருவதாகவே சொல்கிறாா்கள். அடுத்து குட்கா விற்பனைக்கு முழுமையாகத் தடை செய்யப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com