தூத்துக்குடியில் போலி கருப்பு வைரத்தை விற்க முயன்ற இருவர் கைது

தூத்துக்குடியில் போலி கருப்பு வைரத்தை விற்க முயன்ற பெங்களூர், ஓசூரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் போலி கருப்பு வைரத்தை விற்க முயன்ற இருவர் கைது

போலி கருப்பு வைரம்

தூத்துக்குடியில் போலி கருப்பு வைரத்தை விற்க முயன்ற பெங்களூர், ஓசூரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் வைரக் கற்கள் விற்பனை செய்வதாக தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ் ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தெம்பாக காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவி தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி சிதம்பர நகர்ப் பகுதியில் இரண்டு பேர் போலி வைரக்கற்கள் விற்க முயன்றது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இரண்டு பேரைப் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் வைரக் கற்களுக்கான சான்றுகளுடன் கருப்பு வைரம் வைத்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது பெங்களூரை சேர்ந்த ஆனந்தா, ஓசூரைச் சேர்ந்த வெங்கடேஷ் பாபு ஆவார்.

இவர்கள் கருப்பு வைரம் என நகை வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் விற்க முயன்றது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில்  நகைக்கடை அதிபர்களிடம் கருப்பு வைரம் என 27 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற போது அவர்கள் சோதனை செய்தபோது போலி என்பது தெரிந்ததைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். 

மேலும் இவர்கள் வேறு எங்கும் போலி வைரக்கற்கள் விற்பனை செய்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com