சங்ககிரியில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி பேரூராட்சி அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி பேரூராட்சி அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் 

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டக்கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்ககிரி வட்டக்கிளையின் தலைவர் ஆர்.பழனிசாமி இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். 

விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் வி.அமிர்தலிங்கம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியது:-

பேரூராட்சிப்பகுதிகள் உள்ளிட்ட சிறு நகரங்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தை மத்திய, மாநிலரசுகள் தொடங்க வேண்டும், சி.ரங்கராஜன் குழு பரிந்துரையின்படி  நூறு நாள் வேலைத் திட்டத்தைப் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விரிவுபடுத்த தமிழகரசு நடைபெற உளள சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும், நூறு நாள் வேலை நாள்களை இருநூறு நாள்களாகவும், தினக்கூலியை ரூ.600 உயர்த்தி வழங்க வேண்டும், கரோனா தொற்று காலத்தில் விவசாயத் தொழிலாளர்கள்  குடும்பத்திற்கு மாதம் ரூ.7500 நிவாரணமாக வழங்க வேண்டும், 60 வயதைக் கடந்த தொழிலாளர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலர் பி.ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கே.வெங்கடாஜலம்,  சங்ககிரி வட்டச் செயலர் எஸ்.கே.சேகர், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜி.கணபதி, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் வி.தங்கவேல், சங்ககிரி வட்டச் செயலர் டி.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் குறித்து சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியத்திடம் மனுக்களை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com