கம்பத்தில் சாலை அமைக்கும் பணியை நிறுத்திய பொதுமக்கள்: சாக்கடை அமைக்கக்கோரி வலியுறுத்தல்

தேனி, கம்பத்தில் சாலை அமைக்க வந்தவர்களை, தடுத்து நிறுத்திய பொதுமக்கள் சாக்கடை அமைக்க வலியுறுத்தினர். 
கம்பம் 31வது வார்டு கக்கன் காலனியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கம்பம் 31வது வார்டு கக்கன் காலனியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் சாலை அமைக்க வந்தவர்களை, தடுத்து நிறுத்திய பொதுமக்கள் சாக்கடை அமைக்க வலியுறுத்தினர். சாலை அமைக்கும் பணியை நிறுத்திய ஒப்பந்ததாரர் வேலைகளைச் செய்யாமல், வெள்ளிக்கிழமை திரும்பிச் சென்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் 31வது வார்டில் உள்ளது கக்கன்ஜி காலனி, இங்கு கம்பம் நகராட்சி சார்பில் தார் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை சாலை அமைக்க நகராட்சி ஒப்பந்ததாரர் ரோடு ரோலர், ஜேசிபி இயந்திரம் போன்ற வாகனங்களுடன் வந்தார், அப்போது ஆண்-பெண் பொதுமக்கள் திரண்டனர்.

பல ஆண்டு காலமாக கக்கன்ஜி காலனியில் சாக்கடை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் பலனில்லாமல் இருந்த நிலையில் தற்போது தார் சாலை அமைக்க வந்திருப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். முதலில் கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி செய்து தந்த பிறகு தார்சாலை அமையுங்கள் என்று சாலை அமைக்க வந்த பணியாளர்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் ஆண் பெண்கள் கூட்டமாக கம்பம் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்றனர். நகராட்சி பொறியாளர் செல்வராணி உதவிப் பொறியாளர் சந்தோஷ் குமார் ஆகியோரை சந்தித்து கழிவுநீர் சாக்கடை அமைக்குமாறு கோரினார். அதற்கு பொறியாளர்கள் முதலில் தார்ச்சாலை அமைத்துவிட்டு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும் என்றனர்.

ஆனால் பொதுமக்கள் அதற்கு சம்மதிக்கவில்லை, உடனே நகராட்சி பொறியாளர்கள் உங்கள் விருப்பப்படியே முதலில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும். தற்போது நடைபெற்று உள்ள தார் சாலைப் பணிகளை நிறுத்தி விடுகிறோம் என்று கூறி பணிகளை நிறுத்த உத்தரவிட்டனர். அதன்படி நகராட்சி ஒப்பந்ததாரர் பணிகளை செய்யாமல் திரும்பிச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com