நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் தை கடைசி வெள்ளி திருவிழா

தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரின் மனைவி பெயரால் அமைந்த நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் தை கடைசி வெள்ளி திருவிழா. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த யமுனாம்பாள்.
தை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த யமுனாம்பாள்.

தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரின் மனைவி பெயரால் அமைந்த நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் தை கடைசி வெள்ளி திருவிழா. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்: தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரின் மனைவி பெயரால் அமைந்த நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் தை கடைசி வெள்ளி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிதாபசிம்மரின் காதல் மனைவி யமுனாம்பாள். மன்னர் தன் மனைவிக்காக  நீடாமங்கலத்தில் அழகிய அரண்மனையை கட்டினார். அதில் யமுனாம்பாள் வசித்து வந்தார். நீடாமங்கலம் பகுதி மக்களுக்கு பலவித நன்மைகளை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக அரண்மனை அருகில் உள்ள யமுனாம்பாள் தோட்டத்தில் ஐக்கியமானார்.

நீடாமங்கலம் பகுதி மக்களை தெய்வம்போல் காத்து வந்ததால் யமுனாம்பாளுக்கு தனிக்கோவில் ஒன்றினை எழுப்பி இப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணி பெண்கள் சுக பிரசவம் வேண்டியும், திருமணமாகாத பெண்கள் திருமணம் நடைபெறவும் இக்கோவிலில் வேண்டுதல் செய்து கொள்வதும் வழக்கம். 

சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வருடம் தோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று திருவிழா நடைபெறுவது வழக்கம்.

தை கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்.

தை கடைசி வெள்ளிக்கிழமை கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். தொடர்ந்து ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பெண்கள் மாவிளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

கஞ்சிவார்த்தலும், அன்னதானமும் நடந்தது. சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நற்பணிமன்றத்தினர் தலைவர் என்.எம்.மைதீன் தலைமையில் நீர்,மோர் வழங்கினர்.

விழா ஏற்பாடுகளை சத்திரம் மேலாளர் மற்றும் நகரவாசிகள், கிராம வாசிகள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com