கண்ணை மூடியிருந்தால் கூட அதிமுக ஆட்சியின் குறைகள் தெரியும்: ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம் கானையில், திமுக சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர் தொகுதியில் ஸ்டாலின் பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின்
விழுப்புரத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம் கானையில், திமுக சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர் தொகுதியில் ஸ்டாலின் பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

மூன்றாம் கட்டமாகத் தொகுதி வாரியாக சென்று மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்து வருகிறேன். ஒட்டுமொத்த மக்களும் இந்த ஆட்சியை நடக்கவில்லை என்பதைத் தெரிவிக்கும் வகையில் குறைகளைத் தெரிவித்து வருகின்றனர். மூன்று மாத காலத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் குறைகள், கவலைகள் தீர்க்கப்படும். நான் குறைகளைக் கேட்பதை அறிந்த முதல்வர் பழனிசாமி, செல்போனிலேயே குறைகளைச் சொல்லலாம் தீர்க்கப்படும் எனச் சொல்கிறார்.

எந்த குறையுமில்லை நாட்டில் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டதாக அவர் சொல்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக அவர் எங்கே போயிருந்தார். ஆட்சிக் காலத்திலேயே கோரிக்கையைச் சரி செய்திருக்க வேண்டும். பூதக் கண்ணாடியால் பார்த்தாலும் ஆட்சியில் குற்றம் காண முடியாது என்கிறார் பழனிச்சாமி. கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே குற்றங்கள் சத்தமாகக் கேட்கும்.

விழுப்புரத்தில் கட்டிய தடுப்பணை ஒரு மாத காலத்தில் உடைந்தது அதற்குச் சாட்சி. தரமற்ற அணையைக் கட்டிய ஒப்பந்ததாரரைக் கைது செய்யாதது ஏன். சிவி சண்முகம் மரியாதையாகப் பேச கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்திற்கு அவர் முதலில் என்ன செய்திருக்கிறார்.

நந்தன் கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. பாதாளச் சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்தவில்லை எந்த பணியும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை. இவர்களிடமிருந்து ஆட்சியை மீட்டு திமுக ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்றார். 

திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி, மாநில விவசாய அணி துணைச் செயலர் அன்னியூர்சிவா உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com