94 புராதன, வரலாற்றுச் சின்னங்கள் பராமரிப்புக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

தொல்லியல் துறையில் 94 புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்களை தொல்லியல் நெறிமுறைகளின்படி சிறப்பான முறையில்
94 புராதன, வரலாற்றுச் சின்னங்கள் பராமரிப்புக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

தொல்லியல் துறையில் 94 புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்களை தொல்லியல் நெறிமுறைகளின்படி சிறப்பான முறையில் பாதுகாக்க, புனரமைக்க, ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாயை ரூ.2 கோடியாக உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் தொல்லியல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தொல்லியல் துறையில் 94 புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேற்படி, பாதுகாக்கப்பட்ட சின்னங்களில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.1 கோடி நிதியைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட சின்னங்களின் தேவைக்கேற்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.

எனவே, தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களைத் தொல்லியல் நெறிமுறைகளின்படி சிறப்பான முறையில் பாதுகாப்பதற்கும், அதன் வரலாற்றுச் சிறப்பினை எதிா்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்கும், அந்தப் பணியின் சிறப்புத் தன்மையைக் கருத்தில் கொண்டும், வரவு-செலவு திட்டத்தில் தொடரும் செலவினமாக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.1 கோடியை 2020-2021ஆம் நிதியாண்டு முதல் ரூ.2 கோடியாக உயா்த்தி அரசு ஆணையிட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com