தமிழகத்துக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.286.91 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு

தமிழகத்தில் நேரிட்ட இயற்கை பேரிடர்களான புரெவி புயல் மற்றும் நிவர் புயல் பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.286.91 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்துக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.286.91 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு
தமிழகத்துக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.286.91 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு

புது தில்லி: தமிழகத்தில் நேரிட்ட இயற்கை பேரிடர்களான புரெவி புயல் மற்றும் நிவர் புயல் பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.286.91 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் புது தில்லியில் இன்று  உயர்நிலை குழுக் கூட்டம் நடைபெற்றது.

தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 2020-ஆம் வருடம்
வெள்ளம்/ புயல் (நிவர் மற்றும் புரெவி)/ பூச்சிகளின் தாக்குதலால்
பாதிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், பிகார் மற்றும்
மத்திய பிரதேச மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண
மேலாண்மை நிதியிலிருந்து கூடுதலாக ரூ. 3,113.05 கோடியை அளிக்க
இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்துக்கு நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகளுக்கு ரூ.286.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில், நிரவி புயல் பாதிப்புக்கு ரூ.63.14 கோடியும் புரெவி பயுல் பாதிப்புக்கு ரூ.223.77 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2020 தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ. 280.78 கோடியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிகார் மாநிலத்திற்கு ரூ. 1,255.27
கோடியும், காரீப் பருவகாலத்தின் போது பூச்சிகளின் தாக்குதலால்
பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்திற்கு ரூ. 1,280.18 கோடியும் வழங்க
உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் 2020-21 நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து
28 மாநிலங்களுக்கு இதுவரை ரூ. 19,036.43 கோடியையும், தேசிய
பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ. 4,409.71
கோடியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com