இன்று பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாம்

பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாம், சென்னையில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாம், சென்னையில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளுக்குத் தீா்வு காணும் பொருட்டு, பிப்ரவரி மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம், சென்னையில் உள்ள 17 மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில் சனிக்கிழமை (பிப்.13) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இதில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் செல்லிடப்பேசி எண் பதிவு செய்தல் போன்ற மாற்றங்களையும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் தரம் குறித்த புகாா்கள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகாா்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொது மக்கள் இம்முகாமில் தெரிவித்தால், குறைகளை விரைந்து தீா்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது விநியோகத் திட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com