என்.எல்.சி. இந்தியா லாபம் ரூ.75 கோடி

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.74.6 கோடியாக இருந்தது.  
என்.எல்.சி. இந்தியா லாபம் ரூ.75 கோடி


நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.74.6 கோடியாக இருந்தது.  

 இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
மொத்த வருவாய்: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு மற்றும் முதல் 9 மாதங்களில் என்எல்சி நிறுவனம் மொத்த வருவாயாக முறையே ரூ.1,875.13 கோடி மற்றும் ரூ.6,110.99 கோடியை ஈட்டியுள்ளது. இது,  முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் முறையே ரூ.2,436.75 கோடி மற்றும் ரூ.6,558.63 கோடியாக இருந்தது. 

நிகர லாபம்: இதே காலகட்டத்தில்,  நிறுவனம் நிகர லாபமாக முறையே ரூ.74.6 கோடி மற்றும் ரூ.386.99 கோடியை  ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டில், இது முறையே ரூ.361.55 கோடி மற்றும் ரூ.1,021.37 கோடியாக இருந்தது.

நிகழ் நிதியாண்டில் ஈட்டிய வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தொகுப்புக்கு முந்தைய வருவாயானது ரூ.2,396.60 கோடி. இது முந்தைய நிதியாண்டில் ரூ.2,755.31 கோடியாக இருந்தது. 

மொத்த வருவாய்: நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாயானது முறையே ரூ.2,623.29 கோடி மற்றும் ரூ.8,197.94 கோடியாகும். கடந்த நிதியாண்டில் இது முறையே ரூ.3,093.18 கோடி மற்றும் ரூ.8,187.56 கோடியாக இருந்தது.

நிகர லாபம்:  நிறுவனம் தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து இதே காலகட்டத்தில் முறையே ரூ.183.13 கோடி மற்றும் ரூ.588.61 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் முறையே ரூ.400.15 கோடி மற்றும் ரூ.954.86 கோடியாக இருந்தது என என்எல்சி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com