
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் புதன்கிழமை (பிப்.17) முதல் விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளனா்.
தமிழகப் பேரவைக்கு ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தல் பிரசாரம் தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தோ்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் புதன்கிழமை முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனா்.
பொது தொகுதியில் போட்டியிட விரும்புவோா் ரூ.25,000, மகளிா், தனித் தொகுதிகளில் போட்டியிடுவோா் ரூ.15,000 கட்டி மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் விருப்பமனு அளித்திருந்தால், அதற்கான பணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.