பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா  புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா  புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

பாவூர்சத்திரம் காமராஜர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு வென்னிமலை முருகன் கோவில் மாசித்திருவிழா புதன்கிழமை  தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. 

காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மற்றும் பாலாபிசேகமும்,   மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.  விழா  தொடர்ந்து பிப்.27 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது.

முதல் நாள் திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பிலும், இரண்டாம் நாள் திருவிழா சைவ வேளாளர் சமுதாயம் சார்பிலும், மூன்றாம் நாள் திருவிழா தேவர் சமுதாயம் சார்பிலும், நான்காம் நாள் திருவிழா யாதவர் சமுதாயம் சார்பிலும், ஐந்தாம் நாள் திருவிழா பட்டங்கட்டியார் சமுதாயம் சார்பிலும், ஆறாம் நாள் திருவிழா அரிசன சமுதாயம் சார்பிலும், ஏழாம் நாள் திருவிழா விஸ்வகர்மா சமுதாயம் சார்பிலும், எட்டாம் நாள் திருவிழா செங்குந்த முதலியார் சமுதாயம் சார்பிலும், ஒன்பதாம் நாள் திருவிழா வணிக வைசிய செட்டியார் சமுதாயம் சார்பிலும், பத்தாம் நாள் திருவிழா நாடார் சமுதாயம் சார்பிலும், பதினோராம் நாள் திருவிழா பிராமணர் சமுதாயம் சார்பிலும் நடைபெறுகிறது.

திருவிழாவிற்கான எற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com