தாழம்பூர் ஸ்ரீத்ரிசக்தி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

தாழம்பூர் ஶ்ரீத்ரிசக்தி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
தாழம்பூர் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றம்
தாழம்பூர் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றம்

தாழம்பூர் ஶ்ரீத்ரிசக்தி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

திருப்போரூரை அடுத்த தாழம்பூ ரயில் உள்ள ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இவ்விழாவில் பிப் 25−ம் தேதி த்ரிசக்தி அம்மன் திருத்தேர் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாழம்பூர் ஊராட்சியில் நத்தம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணாநகரில் ஶ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே கல்வி, வீரம், செல்வம் அருளும் ஞானசக்தி ஶ்ரீ ஞானசரஸ்வதி, இச்சாசக்தி ஶ்ரீ லஷ்சுமி, க்ரியாசக்தி ஶ்ரீமூகாம்பிகை தேவிகளுக்கு ஒரே கோவிலில் மூலவசன்னதி தனித்தனியாக ஒருங்கே அமைந்துள்ளது. 

இக்கோவிலை கேரளாவைச் சேர்ந்த  ஆன்மீகச் செம்மல் டாக்டர்.கே.கே.கிருஷ்ணன்குட்டி அமைத்து நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில்  17ஆம் தேதி  புதன்கிழமை முதல் பிப்ரவரி 27ஆம் தேதி சனிக்கிழமை வரை திருவேற்காடு ஶ்ரீஆதிகருமாரிபட்டர் அன்னதானசிவம் ஆன்மீக அருள் ஞான வள்ளல் மஹாகும்பாபிஷேக சக்ரவர்த்தி சண்டிஹோமம் சரபம் பிரம்மரிஷி தவத்திரு ஶ்ரீலஶ்ரீ ஐயப்பசுவாமிகளின் குருவருளாலும் த்ரிசக்தி அம்மன் திருவருளாலும்  பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. 

முக்கிய நிகழ்ச்சியாக வரும் வியாழக்கிழமை 25.02.2021 அன்று முப்பெரும் தேவியரின் திருத்தேர் பவனி வெகு விமரிசையாக உள்ளது. அதேபோல் 21.02.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் ஆலய வளாகத்தில் மாணவர்களின் கல்வி மேம்படச் சிறப்புக் கல்வி யாகம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் காலை, மாலை இருவேளையும் யாகசாலை பூஜை, அம்மன் புறப்பாடு நடைபெறும்.

திருவிழாவின்போது ஆலயத்தில் வேதபாராயணம், இன்னிசைகச்சேரி, ஆன்மீக சொற்பொழி, பரதநாட்டியம் நடைபெறும். அதேபோல் பத்து நாள்களும் காலையிலும் மாலையிலும் என்.வரதன் குழுவினர்களின் இன்னிசை கச்சேரி நடைபெறும். மூன்று வேளையும் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். 17ந் தேதி அம்பாள் சைலபுத்ரீயாகவும் தேவியாகவும், 18ந் தேதி ப்ரம்மசாரிணிதேவியாகவும், 19ந் தேதி சந்தரகண்டா தேவியாகவும், 20ந் தேதி கூஸ்மாண்டா தேவியாகவும், 21ந் தேதி ஸ்கந்தமாதாகவும், 22ந் தேதி காத்யாயணி தேவியாகவும், 23ந்தேதி மஹாகெளரிதேவியாகவும், 24ந் தேதி மஹாகெளரி தேவியாகவும், 25ந் தேதி சித்திதேவியாகவும், 26ந் தேதி மஹா த்ரிசக்திதேவியாகவும் அருள்பாலிப்பாள். 

26ந் தேதி கொடி இறக்கமும் 27ந்தேதி விடையார்த்தியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆலய அறங்காவலரும், ஆலயஸ்தாபகரும் அருட்தொழில்மாமணியும், ஆன்மீக செம்மலுமான டாக்டர் கே.கே. கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட கோயில் அறக்கட்டளைகள் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com