சிறுவனை பாலியல் கொடுமை செய்து கொன்ற குஜராத் இளைஞருக்கு 3 தூக்கு தண்டனை

சிறுவனை பாலியல் கொடுமை செய்து கொன்ற குஜராத் இளைஞருக்கு 3 தூக்குத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
சிறுவனை பாலியல் கொடுமை செய்து கொன்ற குஜராத் இளைஞருக்கு 3 தூக்கு தண்டனை
சிறுவனை பாலியல் கொடுமை செய்து கொன்ற குஜராத் இளைஞருக்கு 3 தூக்கு தண்டனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கூரில் 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் கொடுமை செய்து கொன்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் 3 தூக்குத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கீரனூர் பகுதியில் கல் குவாரியில் வேலை செய்து வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த டானிஸ் பட்டேல் (34) என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி ஒடுக்கூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தார்.

ஆசனவாயில் தொடங்கி குடல் வரை கடுமையான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் 18 நாள் கழித்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறை வழக்குப் பதிவு செய்து டானிஸ் பட்டேலைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சத்யா, வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.

குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் 3 உள்பிரிவுகளில் தலா ஒரு தூக்குத் தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-இல் ஓர் ஆயுள் தண்டனையும், பிரிவு 363-இல் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஏற்கெனவே ஒரு மாதத்துக்கு முன்பு இதே நீதிமன்றத்தில் சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த குற்றவாளிக்கு மூன்று தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com