புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை

பிப்.22-ல் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை

பிப்.22-ல் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். 
புதுவை சட்டப் பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 உறுப்பினர்கள், மத்திய அரசின் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 ஆகும். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் பதவி விலகியதுடன், ஒருவர் தகுதி நீக்கமும் செய்யப்பட்டதால், தற்போது அந்தக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 10-ஆகக் குறைந்துள்ளது. 
மேலும், அந்தக் கட்சிக்கு திமுகவைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.-க்கள், சுயேச்சை ஒருவர் என 14 பேரின் ஆதரவு உள்ளது. இதேபோல, எதிர்க்கட்சிகள் தரப்பில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக  4, பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்தம் 14 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. 
ஆளும் காங்கிரஸ் கூட்டணி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை சம பலத்தில் (14 பேர்) உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு துணைநிலை ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் இன்று உத்தரவிட்டுள்ளார். 
வருகிற 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் புதுச்சேரி சட்டப்பேரவையில் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நம்பிக்கைவாக்கெடுப்பை முழுமையாக விடியோ பதிவு செய்யவும் ஆளுநர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 
இந்த நிலையில் பிப்.22-ல் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். முதல்வர் வீட்டில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். 
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர், அதிகார பலத்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியை மாற்றுவது பாஜகவுக்கு கைவந்த கலை. தேர்தல் நேரத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு வேலையை பாஜக தொடங்கியுள்ளது. எங்களது அரசை கவிழ்க்க பலமுறை திட்டம் தீட்டினார்கள், அதை நாங்கள் முடியடித்தோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com