சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் கைது

20 பேர் உயிர்களை பறித்த சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 
தில்லி முதல்வர் மகளிடம் பணமோசடி செய்த 3 பேர் கைது
தில்லி முதல்வர் மகளிடம் பணமோசடி செய்த 3 பேர் கைது


சாத்தூர்: 20 பேர் உயிர்களை பறித்த சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை(பிப்.12) பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 20 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தார். காயமடைந்தவர்கள் சாத்தூர், படந்தால், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அனைவரும் சாத்தூர், சிவகாசி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வெடிவிபத்தில் 20 பேர் உயிர்களை பறித்து தரைமட்டமான சாத்தூர் பட்டாசு ஆலை.

இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் போலீசார் 5 தனிப்படை அமைத்து பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் குத்தகைக்காரர் உள்பட 6 பேரை தேடி வந்தனர். 

இந்நிலையில், ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் சக்திவேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதுதொடர்பாக 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குத்தகைதாரர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்தனர். 

இதனைத்தொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சந்தனமாரியை வியாழக்கிழமை அதிகாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com