சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் கருப்பு தினம் அனுசரிப்பு

கடந்த 2009-ஆம் ஆண்டு  வழக்குரைஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து அனுசரிக்கப்படும் கருப்பு தினத்தை முன்னிட்டு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் கருப்பு தினம் அனுசரிப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் கருப்பு தினம் அனுசரிப்பு

சென்னை: கடந்த 2009-ஆம் ஆண்டு  வழக்குரைஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து அனுசரிக்கப்படும் கருப்பு தினத்தை முன்னிட்டு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உயர்நீதிமன்றம் வந்திருந்த சுப்பிரமணியசாமி மீது வழக்குரைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், வழக்குரைஞர்களை கைது செய்ய முயன்ற போது கலவரம் ஏற்பட்டது. 

கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் போது போலீஸார் நடத்திய தடியடியில் வழக்குரைஞர்கள் பலர் படுகாயமடைந்தனர். மேலும் உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களின் கார்களின் கண்ணாடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலைக் கண்டித்து ஆண்டு தோறும் பிப்ரவரி 19-ஆம் தேதியை வழக்குரைஞர்கள் கருப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர்.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை (பிப்.19) கருப்பு தினத்தை கடைபிடித்தனர். உயர்நீதிமன்ற வளாகத்தின் ஆவின் நுழைவு வாயில் அருகே சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை நாங்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். வழக்குரைஞர்களை தாக்கிய காவலர்களையும், காவல்துறை அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விசாரித்து சட்ட ரீதியாக  தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com