முறைகேடுகளைத் துணிச்சலாகச் செய்கின்ற ஆட்சிதான் அதிமுக ஆட்சி: மு.க.ஸ்டாலின்

முறைகேடுகளைத் துணிச்சலாகச் செய்கின்ற ஆட்சி தான் அதிமுக என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 
அரியலூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு
அரியலூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு

முறைகேடுகளைத் துணிச்சலாகச் செய்கின்ற ஆட்சி தான் அதிமுக என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

அரியலூர் மாவட்டம், கொல்லபுரம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்டம், அரியலூர்,ஜயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் குன்னம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்குப் பதிலளித்து ஸ்டாலின் பேசியது: 

இன்னும் 3 மாதத்தில் திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வராது என அக்கட்சியினருக்கே தெரிந்துவிட்டது. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுகவை 50 ஆண்டுகளாக கலைஞர் வழி நடத்தினார். தன்னை சாமானியன் என்று சொல்லிக்கொண்டே சாமானியனுக்கான ஆட்சி செய்தவர் கலைஞர். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு நலத்துறையையும், வன்னியர் சமுதாயத்துக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர் கலைஞர். அதிமுக ஆட்சியின் போது முதல்வரை சந்திக்க 7 ஆண்டுகள் காத்திருந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் விவசாயி என்று கூறிக் கொண்டு டெண்டர் மூலம் ஆணையத்தைப் பெற்று வருகிறார். சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில், அவர், பல்வேறு பணிகளுக்கு விரைவாக டெண்டர் விடப்பட்டு வருகிறார். இதன் மூலம் தேவையான கமிஷனை பெற்றுச் சென்று விடலாம் என அவரது தலைமையிலான அதிமுக அரசு எனத் திட்டமிட்டுச் செய்கின்றன.

ஒரு கோடிக்கு மேல் டெண்டர் விடப்பட்டால், பொதுப்பணித்துறை மண்டல பொறியாளரே டெண்டர்களை முடிவு செய்யலாம் என திருத்தம் செய்து கடந்த மாதம் விதியை திருத்தி ரூ.3, 384 கோடியில் டெண்டர் விட்டுள்ளனர். இது போன்ற முறைகேடுகளை முறையாக செய்கின்ற ஆட்சி தான் அதிமுக ஆட்சி. அதிமுக செய்த ஊழல் குறித்து ஆளுநரிடம் உரிய ஆதாரங்களுடன் மனு அளித்தோம். சிபிஐ விசாரணை நடைபெறாமல் இருக்க உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தடை உத்தரவு பெற்றுள்ளார். உச்சநீதிமன்ற தடை இல்லை எனில், பழனிசாமி தற்போது சிறையில் இருந்திருப்பார். புதிய வேளாண் சட்டங்களால் தங்களுக்கு குறைந்தப்பட்ட ஆதார விலை கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

தற்போது ஆட்சியில் இல்லாத நிலையிலும் மக்களுக்காக போராடும் இயக்கமாக திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இன்னும் மூன்று மாதத்தில் மக்கள் அச்சத்தைப் போக்கும் அரசாகவும், மக்கள் வாழ்வாதாரம் வளர்ச்சியடையும் அரசாகவும் திமுக அமையும் என்றார். முன்னதாக, பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்களுக்கு சால்வை அணிவித்து, விருது வழங்கினார். 

தொடர்ந்து, மக்களின் மனுக்களில் சிலவற்றை எடுத்து படித்த ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த மறுநாளே அனைத்து மாவட்டங்களிலும் பெறப்பட்ட மனுக்களின் பெட்டிகள் திறக்கப்பட்டு 100 நாள்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர்கள் அரியலூர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் ராஜேந்திரன், கட்சியின் முதன்மைச் செயலர் கே.என்.நேரு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com