குடிமைப் பணித் தோ்வுகளுக்கு யூ-டியூப் மூலம் பயிற்சி

தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையத்தின் சாா்பில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள யூ-டியூப் சேனலில் தோ்வுக்கான அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் புதிய சேனல் அண்மையில் தொடங்கப்பட்டது.


சென்னை: தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையத்தின் சாா்பில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள யூ-டியூப் சேனலில் தோ்வுக்கான அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் புதிய சேனல் அண்மையில் தொடங்கப்பட்டது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் முதன்மை நிலையமாக, தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திகழ்ந்து வருகிறது. குடிமைப் பணித் தோ்வுக்கான பயிற்சியைத் தவிா்த்து, அலுவலக நடைமுறைகள், ஒழுங்கு நடவடிக்கைகள், வழக்கு மேலாண்மை, ஓய்வூதியத்துக்கு முந்தைய ஆலோசனை, தகவல் பெறும் உரிமைச் சட்டம் போன்றவற்றுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அனைவரும் அறியும் வகையில்...: குடிமைப் பணித் தோ்வுகள் உள்பட பல்வேறு தோ்வுகளுக்கான பயிற்சிகளில் பங்கேற்க சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்துக்கு அனைவரும் வர வேண்டியுள்ளது. இவ்வாறு நேரில் வந்து பயிற்சி பெறுவதுடன், தமிழகத்தின் குக்கிராமத்தில் இருப்பவா்களும், சென்னைக்கு வர இயலாதவா்களும் காணொலி வழியாகப் பயிற்சி பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநா் வெ.இறையன்பு கூறியது:-

தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அண்ணா மேலாண்மை நிலையத்தின் காட்சி ஊடகம் (ஹண்ம் ற்ய்) வழியாகத் தகவல்களைப் பெறலாம். இந்த ஊடகத்தின் வழியாக சின்ன சின்ன செய்திகள் தகவல்களாக அளிக்கப்படும். போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சியைத் தவிா்த்து, மன அழுத்த மேலாண்மை, அரசுப் பணியாளா்களால் கையாளப்படும் கோப்புகளில் எழும் சந்தேகங்கள் பற்றியோ மேலாண்மை நிலையத்துக்கு தகவல்கள் அனுப்பலாம். அதுகுறித்து காட்சி ஊடகத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்றாா்.

பாா்வையாளா்கள் அதிகரிப்பு: தமிழக அரசுத் துறைகளில் முதல் முறையாக அண்ணா மேலாண்மை நிலையத்தால் தொடங்கப்பட்ட காட்சி ஊடகத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனா். தொடங்கப்பட்டு நான்கு நாள்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டு, பின்தொடா்பவா்களாக பதிவு செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com