கோவையில் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டார் வேலுமணி: மு.க.ஸ்டாலின்

கோவையில் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டார் வேலுமணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 
கோவையில் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டார் வேலுமணி: மு.க.ஸ்டாலின்

கோவையில் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டார் வேலுமணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் - காரமடை அருகில் இன்று நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர், கோவையில் நடக்கும் பல விஷயங்கள் மர்மமாக இருக்கின்றன. அதில் ஒன்று கோவையின் குடிநீர் விநியோகம்.

உள்ளாட்சித் துறையில் மிக முக்கியப் பணியே குடிநீர் விநியோகம் தான். அதையே தனியாருக்கு தாரை வார்த்துவிட்டார் வேலுமணி. இதைக் கூட உங்கள் துறையால் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக் துறையை வைத்துள்ளீர்கள்? அதைக் கலைத்து விட வேண்டியதுதானே!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துக்கு 3000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் அதிகாரப்பூர்வமான செய்திகள் அல்ல. சொல்லப்படும் தகவல்கள் தான்.

ஒரு அரசாங்கம் ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது என்றால் வெளிப்படைத் தன்மை வேண்டாமா? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது சம்பந்தமாக கேட்டபோதும் உண்மையைச் சொல்லவில்லை. குடிநீர் திட்டத்தை தனியாரிடம் கொடுக்கவில்லை, குடிநீர் குழாய்களை சரி செய்யச் சொல்லி இருக்கிறோம் என்று மாநகராட்சி சொன்னது. அதன்பிறகு விநியோகம் செய்யும் உரிமையை கொடுத்துள்ளோம் என்றார்கள்.

இப்போது கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 வார்டுகளிலும் அந்த நிறுவனம் பணியைத் தொடங்கி நடத்தி வருகிறது. அப்படியானால் இனி தண்ணீர் விநியோகம் அவர்கள் தான் செய்யப் போகிறார்களா? செய்தால் குடிநீர் கட்டணத்தை அவர்கள் தான் நிர்ணயிப்பார்களா? எவ்வளவு நிர்ணயிப்பார்கள்? அதற்கு அவர்களுக்கு இந்த அரசால் என்ன உத்தரவாதம் தரப்பட்டுள்ளது என்ற தகவல்கள் இல்லை!

ஆனால் இந்த சூயஸ் திட்டத்தை பற்றி தவறான தகவல்களை பரப்பினால் கைது நடவடிக்கை என்று வேலுமணியின் வட்டாரம் விளம்பரம் கொடுத்து மிரட்டுகிறது என்றால் கோவை என்பது வேலுமணியின் குத்தகை பூமியா?

கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் எஃகு கோட்டை என்று சில நாட்களுக்கு முன்னால் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறார். இந்த எஃகு கோட்டையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே ஓட்டை போட்டுவிட்டோம்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு தொகுதி தவிர அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றது திமுக கூட்டணி. அதுவும் சாதாரண வெற்றி அல்ல. 5 லட்சம், 4 லட்சம், 3 லட்சம், 2 லட்சம் என்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கூட்டணி தான் திமுக கூட்டணி என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com