சங்க இலக்கியங்களுக்கு உயிர்கொடுத்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா:  மாவட்ட ஆட்சியர் புகழாரம்

ஒலைச்சுவடிகளில் இருந்து சங்க இலக்கியங்களை அச்சில் ஏற்றி சங்க இலக்கியங்களுக்கு உயிர்கொடுத்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா என்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா புகழாரம் சூட்டினார். 
தமிழ்த்தாத்தா உ.வே.சா 167வது பிறந்தநாள் விழாவையொட்டி உத்தமதானபுரத்தில் உள்ள நினைவு இல்லத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா.
தமிழ்த்தாத்தா உ.வே.சா 167வது பிறந்தநாள் விழாவையொட்டி உத்தமதானபுரத்தில் உள்ள நினைவு இல்லத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா.

நீடாமங்கலம்: ஒலைச்சுவடிகளில் இருந்து சங்க இலக்கியங்களை அச்சில் ஏற்றி சங்க இலக்கியங்களுக்கு உயிர்கொடுத்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா என்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா புகழாரம் சூட்டினார். 

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா 167வது பிறந்தநாள் விழாவையொட்டி வலங்கைமான் வட்டம், உத்தமதானபுரத்தில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
 
பின்னர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கூறியதாவது: உலகத்தில் உள்ள பழமையான மொழிகளில் ஹீப்ரு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து இன்றும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் தமிழ் மொழி மட்டும் தான் எக்காலத்திலும் இலக்கியமாகவும், மக்கள் பயன்பாட்டு மொழியாகவும் தொடர்ந்து விளங்கி வருகின்றது.

தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் ஓலைச்சுவடி வடிவில் இருந்த இலக்கியங்களை இன்றும் அனைவரும் படிக்கும் வகையில் புத்தக வடிவில் பதிப்பித்து சிறப்பான பணியை தமிழுக்காக ஆற்றி இருக்கின்றார்கள். தமிழ்த்தாத்தா உ.வே.சா. ஓலைச்சுவடிகளில் இருந்து சங்க இலக்கியங்களை அச்சில் ஏற்றி சங்க இலக்கியங்களுக்கு உயிர்கொடுத்தவர். 

ஓலைச்சுவடிகளை ஊர் ஊராகச் சென்று சேகரித்தவர். தீயில் எரிந்ததையும், தண்ணீரில் ஆற்று நீரில் சென்றதையும் எடுத்துப் பாதுகாத்து, ஓலை சுவடிகளில் இருந்த எழுத்துகளை முறைப்படுத்தி இலக்கியங்களாக முழுமையாக்கி கொடுத்து, ஆசிரியர், மாணவர் உறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் உ.வே.சா.

இளைய தலைமுறையான நீங்கள் வாழ்வில் பிறந்தோம் இருந்தோம் என்று இல்லாமல் பொதுத்தொண்டில் சிறந்து விளங்கவேண்டும். அதன் மூலம் தங்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நல்லபெயரையும் பெறவேண்டும் என்றார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், ஒன்றியக்குழு தலைவர் சங்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கமலராஜன், வட்டாட்சியர் பரஞ்ஜோதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com