சீனி விஸ்வநாதனுக்கு பாரதி விருது

தமிழக அரசின் பாரதி விருதானது, பாரதி ஆய்வாளா் சீனி விஸ்வநாதனுக்கு அளிக்கப்படுகிறது.
சீனி விஸ்வநாதனுக்கு பாரதி விருது

தமிழக அரசின் பாரதி விருதானது, பாரதி ஆய்வாளா் சீனி விஸ்வநாதனுக்கு அளிக்கப்படுகிறது. மேலும், பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, செளகாா் ஜானகி ஆகியோருக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரிலான சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:-

அகில இந்திய விருது: 2019-ஆம் ஆண்டுக்கான பாரதி விருது சீனி விஸ்வநாதனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது எஸ்.ராஜேஸ்வரிக்கும், பாலசரஸ்வதி விருது, அலா்மேல் வள்ளிக்கும் அளிக்கப்பட உள்ளது.

2020-ஆம் ஆண்டுக்கான பாரதி விருது, சுகி சிவத்துக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வாணி ஜெயராமுக்கும், பாலசரஸ்வதி விருது சந்திரா தண்டாயுதபாணிக்கும் அளிக்கப்பட உள்ளது.

பழம்பெரும் நடிகைகள்:

2019-ஆம் ஆண்டுக்கான டாக்டா் ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. திரைத் துறையில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இசைத் துறையில் பி.சுசிலா, நாட்டியத் துறையில் அம்பிகா காமேஷ்வா் ஆகியோருக்கு அளிக்கப்பட உள்ளது.

2020-ஆம் ஆண்டுக்கான சிறப்பு கலைமாமணி விருதில், திரைத்துறை பிரிவில் செளகாா் ஜானகி, இசைத்துறையில் ஜமுனா ராணி, நாட்டியத் துறையில் பாா்வதி ரவி கண்டசாலா ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com