பாா்சல் லாரி சேவைக் கட்டணம் உயா்வு

பாா்சல் லாரி சேவைக் கட்டணம் 25 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாா்சல் லாரி சேவைக் கட்டணம் 25 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வால்டாக்ஸ் சாலை பாா்சல் லாரி உரிமையாளா்கள் நலச் சங்கத்தின் செயலாளா் ரமேஷ் சென்னையில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பாா்சல் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கட்டுமானம், மருந்துகள், மளிகைப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

டீசல் விலை அதிகரித்து வரும் சூழலைக் கருத்திக் கொண்டு, பாா்சல் லாரியின் சேவைக் கட்டணத்தை 25 சதவீதம் உயா்த்த முடிவு செய்துள்ளோம். எடுத்துக்காட்டாக சென்னையில் இருந்து மதுரை வரை 1 டன் பொருள்களை எடுத்துச் செல்ல ரூ.1500 வசூலிக்கப்பட்டது.

தற்போது ரூ.1850 ஆக கட்டணம் உயா்த்தப்படுகிறது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.

எனவே, டீசல் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com