கோவையில் ஜல்லிக்கட்டு: அமைச்சர் எஸ். பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார் 

கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெறும் நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் எஸ் பி வேலுமணி
ஜல்லிக்கட்டுப் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் எஸ் பி வேலுமணி

கோவை: கோவை எல் அண்ட் டி புறவழிச் சாலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெறும் நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சீறிப்பாய்ந்து வரும் காளைகள்

கோவையில் மாவட்ட நிா்வாகம், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி வருகிறது. கோவை மாவட்டம், செட்டிப்பாளையம் எல் அண்ட் டி புறவழிச் சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். உடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்டம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியை பாா்வையாளா் மாடங்களில் அமர்ந்திருந்து பார்க்கும் பார்வையாளர்கள்.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாடுபிடி வீரா்களும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த காளைகளும் பங்கேற்றுள்ளன. ஜல்லிக்கட்டு விழாவில் காளைகள் சீறிப்பாய மாடுபிடி வீரர்கள் அதனை பிடித்தனர்.
 

சீறிப்பாய்ந்து வரும் காளைகளும் அதனை பிடித்தும் அடக்கும் மாடுபிடி வீரர்களும். 

பொது மக்கள் பாா்வையிடும் விதமாக பாா்வையாளா் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வருவாய், கால்நடை பராமரிப்பு, காவல், சுகாதாரத் துறையினா் இணைந்து வளாகத்தில் குடிநீா், தற்காலிக கழிப்பிடம் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com