ஆவராம்பட்டியில் ஜல்லிக்கட்டு: சர்ச்சையை ஏற்படுத்திய மதுபாட்டில்களுடன் இருந்த வரவேற்பு பதாகை

மணப்பாறை அடுத்த ஆவராம்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் 700 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்றுள்ளனர். 
ஜல்லிக்கட்டு விழாவில் வைக்கப்பட்டிருந்த ஹைலைட் வரவேற்பு பதாகை
ஜல்லிக்கட்டு விழாவில் வைக்கப்பட்டிருந்த ஹைலைட் வரவேற்பு பதாகை

மணப்பாறை அடுத்த ஆவராம்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் 700 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்றுள்ளனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புனித அந்தோணியார் பொங்கல் விழாவினை முன்னிட்டு புனித இஞ்ஞாசியார் பேராலய திடலில் ஜல்லிக்கட்டு தற்போது நடைபெறுகிறது. இதில் மணப்பாறை சுற்றுவட்டார பகுதி மற்றும் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 700-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களத்தில் உள்ளனர். 

வருவாய் வட்டாட்சியர் லஜபதிராஜ் கொடியசைத்து போட்டியினை தொடங்கி வைத்தார். ஆட்டம்பாட்டத்துடன் வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்ட ஊர் காளைகள் முதலில் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டதையடுத்து, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட  மாவட்டத்திலிருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டு வருகிறது. 50, 50 தொகுப்பாக காளையர்கள் களத்தில் உள்ளனர்.

மாடிபிடி வீரர்களுடன் சேர்ந்து மாட்டின் உரிமையாளர்களும் கூட்டமாக மாடுபிடி களத்தில் விளையாடினார்கள்.

வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு வெள்ளிக்காசு, சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

காற்றில் பறக்கவிட்ட விதிமுறைகள்:
புதுக்கோட்டை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மணப்பாறை வழியாக முதல்வர் செல்லும் பாதை வரையறுக்கப்பட்டிருந்தால், போலீஸார் முதல்வர் செல்லும் பாதை பாதுக்காப்பு பணிக்கு சென்றிருந்தர். வெறும் 30 போலீஸார் மற்றும் 80 ஊர்காவல்படையினர் மட்டுமே வைத்து பாதுக்காப்பு பணிகள் மேற்கொண்டதால் முறையான முழுமையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை.

மாட்டின் மீது அணியப்பட்டிருக்கும் கயிறுகள் அவிழ்க்கப்பட வேண்டும், மாட்டின் உரிமையாளர் மாடு பிடி களத்தில் நிற்க கூடாது என்பன பின்பற்றாமலேயே கயிற்றுடனேயே வாடிவாசலிலிருந்து காளைகள் அவிழ்க்கப்பட்டது. இதனால், கயிறுகள் மாடுபிடி வீரர்களின் காலில் மிதிபட்டு தடுமாறும் நிலையும், காளைகளின் ஆக்ரோஷமும் குறைந்தது. இதனால், போட்டியின் சுவாரஸ்யம் குறைந்து காணப்பட்டது. 

ஆபத்தை அறியாமல் கைக்குழந்தைகளுடன் தடுப்பு வேலிகளில் அமர்ந்திருந்த பெண்கள்.

பிடிபடாமல் களத்தில் ஓடி சென்ற காளைகள் மீண்டும் பிடி களத்திற்கு திரும்பும் போது வாடிவாசலில் மற்றொரு காளையை அவிழ்க்கக் கூடாது என்பது விதி. இங்கு அதுவும் பின்பற்றாமல் காளைகள் வாடிவாசல் களத்தில் நிற்கும் போதே தொடர்ந்து காளைகள் அவிழ்க்கப்பட்டது. 

மேலும் மாடுபிடி வீரர்கள் பலகட்ட சோதனைகளுக்கு பின் போட்டி களத்தில் இறங்கும் நிலையில், மாடிபிடி வீரர்களுடன் சேர்ந்து மாட்டின் உரிமையாளர்களும் கூட்டமாக மாடுபிடி களத்தில் விளையாடினார்கள்.

போட்டி களத்தில் அமைக்கப்படிருந்த பாதுகாப்பு இரும்பு வேலிகளில் ஏறி அமர்ந்த மதுபிரியர்கள் பொதுமக்களுக்கு மிகுந்த தொந்தரவு அளித்தவாறு இருந்தனர். ஆபத்தை அறியாமல் கைக்குழந்தைகளுடன் பெண்களும் தடுப்பு வேலிகளில் அமர்ந்திருந்தனர். 

வரவேற்பு பதாகை... ஹைலைட்: விழாவில் மதுபிரியர்கள் தொல்லைகள் அதிகமாக இருந்த நிலையில், ஜல்லிக்கட்டு விழாவில் வைக்கப்பட்டிருந்த “புடிச்சா பாருடா... பிடிக்காட்டி போ... சரக்கடிக்கிரவனேல்லாம் கெட்டவன் கிடையாது.  நாங்க நல்லவனும் கிடையாது கெட்டவன் கிடையாது... பெண்ணை பார்த்தா...மண்ணை பார்ப்போம்.. என்று மதுபாட்டில்களுடன் இருந்த வரவேற்பு பதாகை... ஹைலைட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com