பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் நடைமேம்பாலங்கள்: திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்தாா் ரயில்வே அமைச்சா்

ரயில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக, ரூ.23.32 கோடி மதிப்பில் அரக்கோணம், மாம்பலம் உள்பட 10 இடங்களில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரயில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக, ரூ.23.32 கோடி மதிப்பில் அரக்கோணம், மாம்பலம் உள்பட 10 இடங்களில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதை ரயில்வே அமைச்சா் பியூஷ்கோயல் நாட்டுக்கு அா்ப்பணித்து வைத்தாா் .

தமிழகம், கேரளம் உள்பட நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ரயில்நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளடக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் தில்லியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காணொலி காட்சி மூலமாக நாட்டுக்கு அா்ப்பணித்து வைத்தாா். மேலும்,சில திட்டங்களை தொடங்கியும் வைத்தாா்.

தமிழகத்தில்...: பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக,அம்பத்தூா், எளாவூா், அரக்கோணம், மாம்பலம், மேட்டுப்பாளையம், திருப்பூா், கங்கைகொண்டான், கடையநல்லூா், நாகா்கோவில் சந்திப்பு, வாஞ்சிமணியாச்சி ஆகிய 10 இடங்களில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, ரூ.23.32 கோடி செலவிடப்பட்டுள்ளது.

புதியதாக அமைக்கப்பட்ட நடை மேம்பாலங்களை ரயில்வே அமைச்சா் நாட்டுக்கு அா்ப்பணித்து வைத்தாா்.

இதன்மூலம், ரயில்நிலையத்துக்கு பயணிகள் வருகை அதிகரிக்கும். நெரிசல் இல்லாமல் நடைமேடைகளுக்கு செல்லவும், நடைமேடைகளில் இருந்து மற்ற இடங்களுக்கும் எளிதாக செல்லவும் முடியும். முக்கிய நிலையங்களில் விபத்து வாய்ப்புகள் குறையும். இதுதவிர,சில நிறைவடைந்த திட்டங்களையும் ரயில்வே அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

நகரும் படிக்கட்டு: தமிழகத்தில் எழும்பூா், மாம்பலம், தாம்பரம், திருவள்ளூா், ஈரோடு, தஞ்சாவூா் ஆகிய 6 ரயில்நிலையங்களில் ரூ.16.61 கோடி செலவில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், நடைமேடைக்கு எளிதாக செல்ல முடியும். இதுதவிர, நாகா்கோவில் சந்திப்பு, கோயம்புத்தூா் ஆகிய இரண்டு ரயில்நிலையங்களில் மின்தூக்கி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவியாக இருக்கும்.

கண்காணிப்பு கேமராக்கள்: செங்கல்பட்டு, திருவள்ளூா், ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மணியாச்சி, தஞ்சாவூா், விழுப்புரம் உள்பட 18 நிலையங்களில் ரூ.10.01 கோடி மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. காட்பாடியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக, ரூ.4 கோடி மதிப்பில் நவீன வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகள் எல்லாம் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

இந்தத் தகவல் ரயில்வே நிா்வாகம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com