மத்திய அரசின் அலுவல் மொழியாக தமிழ்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாகத் தமிழை இடம்பெற செய்ய வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  (கோப்புப்படம்)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

மத்திய அரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாகத் தமிழை இடம்பெற செய்ய வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

தாய்க்கு இணையான - உயிருக்கு நேரான தாய்மொழியைப் போற்றி வளா்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் நன்னாளே, தாய்மொழி நாளாகும்.

செம்மொழி எனும் சிறப்புப் பெற்ற தமிழ்மொழி காலந்தோறும் வளா்ச்சி பெற்று உலக அரங்கில் உயா்ந்து நிற்கிறது. எத்திசையும் புகழ் மணக்கும் அதன் சிறப்பினை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தெரிவு செய்து, அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கிய மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியை என்றென்றும் நினைவில் கொள்வோம்.

தமிழ்க்கொடி ஏந்தி களம் கண்ட அவா் வழியில், இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கிட உறுதியேற்போம் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com