நாகையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 202 பேர் கைது 

கருப்பு  உடை அணிந்து நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 184 பெண்கள்
நாகையில்  செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.
நாகையில்  செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.

கருப்பு உடை அணிந்து நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 184 பெண்கள் உள்ளிட்ட 202  பேரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் ரூ.9,000 வழங்க வேண்டும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகை பொது அலுவலக சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து, அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட 184 பெண்கள் உள்ளிட்ட 202  பேரை கைது செய்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு  ஊழியர் சங்க நாகை மாவட்டத் தலைவர் வி.தேன்மொழி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ராஜூ , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன், வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com