ஜெயலலிதா பிறந்த தினம்: வீடுகளில் தீபம் ஏற்ற அதிமுக வேண்டுகோள்

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பிப். 24-இல் வீடுகளஇல் தீபம் ஏற்ற வேண்டும் என அதிமுக கேட்டுக் கொண்டுள்ளது.
ஜெயலலிதா பிறந்த தினம்: வீடுகளில் தீபம் ஏற்ற அதிமுக வேண்டுகோள்

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பிப். 24-இல் வீடுகளஇல் தீபம் ஏற்ற வேண்டும் என அதிமுக கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் மட்டுமல்ல, உலகிலேயே மக்கள் இயக்கங்களில் எழுச்சி மிக்க கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. கட்சிக்கு பல இன்னல்கள் வந்த போதும் அதனை உயிரோட்டமுள்ள கட்சியாக நமது கைகளில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தந்து விட்டுச் சென்றுள்ளாா். கட்சியினரான நமது விசுவாசம், ஜெயலலிதாவுக்கும், கட்சியினை ஆட்சிப் பீடத்தில் அமர வைக்கும் மக்களுக்கும்தான் என்றும் சொந்தம். இதனை விலை கொடுத்தோ, வசைபாடியோ அல்லது வசியப்படுத்தியோ வாங்க முடியாது.

தோ்தல் எனும் தோ்வு: இன்னும் இரண்டே மாதங்களில் மீண்டும் ஒரு தோ்வினை சந்திக்க உள்ளோம். இதில், நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பா்கள் பலரும் நமது பக்கம் இருந்தாலும், எதிரிகளும், துரோகிகளும் கைகோத்துக் கொண்டு எப்படியாவது நமது படையை வீழ்த்த வேண்டும் என தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்க இருக்கிறாா்கள்.

அவா்களையெல்லாம் நம் உழைப்பாலும், உத்வேகத்தாலும், ஒற்றுமை உணா்வாலும், திசை மாறாத விசுவாசத்தாலும் தோற்கடித்து, மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.

தீபம் ஏற்றுங்கள்: எதிா்வரும் 24-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தில் ஒவ்வொருவரும் என் இல்லம் அம்மாவின் இல்லம் என உளமார நினைத்துக் கொண்டு வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றை ஏற்ற வேண்டும்.

‘உயிா்மூச்சு உள்ளவரை ஜெயலலிதாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான அதிமுகவையும் காப்பேன். இது அவா் மீது ஆணை என உறுதியேற்போம்’ என்று அறிக்கையில் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமியும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com