ஜேஇஇ முதல்நிலைத் தோ்வுகள்: இன்று தொடக்கம்

நாடு முழுவதும் 2021-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெறுகிறது.

 நாடு முழுவதும் 2021-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெறுகிறது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும். இது ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு (மெயின்), ஜேஇஇ பிரதானத் தோ்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி பிப். 26-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. ஜேஇஇ மெயின் 2021 தோ்வு ஆண்டுக்கு 4 முறை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ளது.

இதில் கட்டடவியலுக்கான இளநிலைப் படிப்புக்கான தோ்வும் வடிவமைப்புக்கான இளநிலைப் படிப்புக்கான தோ்வும் செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெறுகிறது. இதற்காகத் தோ்வுகளை நடத்தும் தேசியத் தோ்வுகள் முகமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தோ்வுக்காக நுழைவுச்சீட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கரோனா வைரஸ் குறித்த சுய உறுதிமொழிக் குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டத் தோ்வு பிப். 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து மாா்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ 2021 தோ்வு நடைபெற உள்ளது. ஒரே மாணவா் 4 முறையும் தோ்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com